இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Tamil Haiku book 11

படம்
#HaikubookReadingMarathon2024 Book 11 நூல்: ஈஸ்வரன் தர்மராஜா கோயில் தெரு நூலாசிரியர்: கலைமாமணி பாரதி வசந்தன், புதுச்சேரி நூல் வகை: ஹைக்கூ பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965 பக்கங்கள்:64. விலை₹80/- தமிழ் ஹைக்கூ உலகம் தோன்றி நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டாலும், ஹைக்கூ நூல்கள் வெளியாகி நாற்பது ஆண்டுகள்தான் ஆகின்றன. இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் அதிக நூல்கள் வெளியாகின்றன என்ற செய்தி மனத்திற்கு மகிழ்ச்சி தந்தாலும், இன்றளவும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான ஹைக்கூ, சென்ரியு குறித்த புரிதல்கள் குறைவாகவே இருக்கின்றன. ஆயினும் 25க்கும் மேற்பட்ட சென்ரியு நூல்களும் வெளிவந்திருக்கின்றன என்பதும் சுட்டத்தக்கது. தமிழில் முன்னத்தி ஏராக விளங்கக்கூடிய கலைமாமணி பாரதி வசந்தன் அவர்கள் புதுச்சேரியின் முதல் சென்ரியு தொகுப்பை வெளியிட்ட பெருமைக்குரியவர். தொடர்ந்து பல தளங்களில் இயங்கி வருபவர். பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடின்றி இலக்கிய நண்பர்களோடு தொடர்பில் இருப்பவர்.இவரின் பல ஹைக்கூ கவிதைகளை இதழ்களிலும், ஆய்வு நூல்களிலும் கண்டு ரசித்திருக்கிறேன். நூலேணி பதிப்பகம் பதிப்பித்த பல ஹைக்க...

Tamil Haiku book 10

படம்
#HaikubookReadingMarathon2024 Book 10 நூல்: ஈரம் உறிஞ்சும் முட்கள் நூலாசிரியர்: சிரா. செல்வகுமார்,  தஞ்சாவூர் நூல் வகை: ஹைக்கூ பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965 பக்கங்கள்:80 விலை₹110/- இந்த நூலில் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க, ஒவ்வொரு காட்சி நம் கண்முன்னே விரியும். ஒரு கவிதையை வாசித்து முடித்தவுடன் அதன் அடர்த்தியும் ஆழமும் நம்மை வியப்புக்குள் ஆழ்த்துகின்றன. காட்சியின் தெளிவை தன் நுட்பப் பார்வையில் பதிவு செய்து படிக்கிற வாசகனை பரவரசப்படுத்துகிறார். குடையில் விழும் மழை விளிம்பில் இருந்து குதிக்கும் மேகத் துளிகள் ஹைக்கூ கவிதையின் வெற்றி என்பது அதன் காட்சிப் படுத்துதலிலேயே இருக்கிறது. அதனால்தான் மட்சுவோ பாஷோவைப் பார்க்க வந்த ஒரு பெண் கவிஞர், தான் எழுதிய கவிதைகளை காட்டினார். ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்த பாஷோ எதிலும் முழு திருப்தி அடையாமல் இருந்தார். குயில் பற்றி எழுதச் சொல்லி அனுப்பினார். தன் இல்லம் வந்த அந்தப் பெண் கவி, இரவு முழுவதும் எழுதி எழுதி பார்த்தார், எதிலும் உயிரோட்டம் இல்லை. கண் விழித்த...

Tamil Haiku

படம்
* உதிரிப்பூக்களை மாலையாக்கலாம் வாங்க* * கன்னிக்கோவில் இராஜா * வானம்பாடி இயக்கம் போலவே.... ஹைக்கூ இயக்கமும் வரலாற்றில் இடம் பிடித்ததில் பெருமகிழ்ச்சி.  1916ஆம் ஆண்டு ஒரு கட்டுரை மூலம் தமிழில் ஹொக்கு (ஹைக்கூ) கவிதை அறிமுகப் படுத்திய மகாகவி பாரதி,  பிறநாட்டு படைப்புகளை தமிழ்மொழியில் மொழிபெயர்க்கச் சொன்னார். நம் தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு ஹைக்கூ கவிதைகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை உதிரியாகவே உள்ளன. அந்த உதிரிப்பூக்களை ஒன்றிணைப்போம் .  எனக்கு தெரிந்ததை பதிவிடுகிறேன். உங்கள் /நண்பர்களின் படைப்பை ஒளிப்படம் எடுத்து (முடிந்தால் எந்த வருடம் என்பதையும் குறிப்பிடுங்கள்) அனுப்புங்கள். அவற்றை வரலாறாக்குவோம் ஆங்கிலத்தில் பலரும் செய்துள்ளனர். பிற மொழிபெயர்ப்பை மட்டுமே பதிவிட்டுள்ளேன். பெயருக்கு முன்  *கவிஞர்* என வாசிக்கவும் * ஜப்பான் *  கா.ந. கல்யாணசுந்தரம் * மலையாளம் * மு. முருகேஷ் இரா. தயாளன்  * தெலுங்கு * கன்னிக்கோவில் இராஜா காரை இரா. மேகலா * ஹிந்தி * முதுமுனைவர் மித்ரா இரா. இரவி நீலநிலா செண்பகராமன் சுடர்முருகையா  மன்னைபாசந்தி முனைவர...

Tamil Haiku book 09

படம்
#HaikubookReadingMarathon2024 Book 09   நூல்: இனிது! இனிது! நூலாசிரியர்: பொள்ளாச்சி குமாரராஜன்  நூல் வகை: ஹைக்கூ  பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965 பக்கங்கள்:64 விலை₹80/- புதுக்கவிதைகள் சிறுகதைகள் ஹைக்கூ என எழுதி வரும் பொள்ளாச்சி குமாரராஜன் அவர்களின் எட்டாவது நூலாக வெளிவந்துள்ளது # இனிது_இனிது ஹைக்கூ நூல். இந்த நூலில் அதிகப்படியாக காதலை மையப்படுத்திய கருப்பொருட்கள் தான் நிரம்பி உள்ளன.  பல கவிதைகள் சென்ரியு தன்மையில் தான் அமைந்துள்ளன *** காதலுக்கு என்ன தடை  உரசி கொண்டன  ஏழை பாதச் சுவடுகள் *** தொடர்ந்து ஹைக்கூவில் இயங்கி வரும் இவர் காதலை ரசித்து ருசித்து எழுதி இருக்கிறார்.  

Tamil hiku book 08

படம்
#HaikubookReadingMarathon2024 Book 08   நூல்: இலையில் பனித்துளி நூலாசிரியர்: மகிமா , சென்னை  நூல் வகை: ஹைக்கூ  பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965 பக்கங்கள்:64 விலை₹80/- தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று புகழப்படும் சங்க காலம் பெண்பாற் புலவர்களால் நிரம்பியது. தமிழ் உலகிற்கு தம் கவிதைகளால் மலரச் செய்த அவர்களின் பெயர்கள், அவர்தம் படைப்புகள் மூலமே சுட்டப்பட்டன. ஒளவையார்.காக்கைப் பாடினியார், வெள்ளிவீதியார் எனப் பலரையும் இக்காலத்தில் அறிந்து வைத்திருக்கிறோம். சமகால இலக்கியத்திலும் பல பெண் கவிஞர்கள் அதிகரித்து வருகின்றனர். கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள் ஆய்வு நூலை வடிவக்கும் பணி மூலம் அறிமுகம் ஆனவர்தான் கவிஞர் #மகிமா (எ) #மகேஸ்வரி அவர்கள்.  இவர் ஆய்வுக் கட்டுரைகளோடு. கவிதைகள், ஹைக்கூ. லிமரைக்கூ . நூல்விமர்சனம் நிகழ்ச்சி தொகுப்பு செய்தல் எனப் பன்முகம் கொண்டு விளங்குபவர். இவரின் ஹைக்கூ கவிதைகளை #இலையில்_பனித்துளி என்ற தலைப்பில் நூலாக கொண்டு வந்துள்ளார் *** மாம்பழங்கள் பறிக்கையில் மரக்கிளையில் ஓடியது முதலில் சுவைத்த அணில் *** இயற்கையோடு இயைந்திருப்பதே நல்வாழ்க...

Tamil Haiku book 07

படம்
#HaikubookReadingMarathon2024 Book 07 நூல்: இயற்கைக்கு இணக்கமானவன் நூலாசிரியர்: க.ஜெய் விநாயக ராஜா, புதுச்சேரி நூல் வகை: ஹைக்கூ பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965 பக்கங்கள்:104  விலை₹150/- மதுரையில் பிறந்து புதுச்சேரியில் வசிக்கும் இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் கவிஞர் # ஜெய்_விநாயக_ராஜா . ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ என ஹைக்கூவின் வகைமைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்த # இயற்கைக்கு_இணக்கமானவன் ஹைக்கூ நூல் இவரின் முதல் நூல். இந்த நூலில் புதுச்சேரி மக்களின் பண்பாடும் இயற்கை சூழலும் மையப் பொருளாக மாறி இருக்கின்றன. அதிலும் சிறார் குறித்த படிப்புகளும் சரிசமமாக இருக்கின்றன. *** தெருமுனை கடக்கும் குழந்தை மெல்ல மெல்ல மறைந்தது புன்னகை *** ஒவ்வொரு கவிதைக்கும் அதற்குரிய ஒளிப்படம் தேடி எடுத்து பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. *** வேதனையில் அப்பா மகிழ்ச்சியில் குழந்தை ஒழுகும் வீடு *** பலருக்கும் அறிமுகமான இந்தக் காட்சி கவிதையாக மாறும் போது ரசிக்க அல்லது வேதனை பட வைத்து விடுகிறது. தொடர்ந்து இந்த நூலில் இது போன்ற பல கவிதைகள்...

Tamil hiku book 06

படம்
#HaikubookReadingMarathon2024 Book 06 நூல்: இமைத்தூரிகை ஓவியங்கள்  Painting of the eye lash நூலாசிரியர்: மேனகா நரேஷ், அமெரிக்கா நூல் வகை: இருமொழி ஹைக்கூ  பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965 பக்கங்கள்:68. விலை₹80/- அமெரிக்காவில் வசிக்கும் கவிஞர் மேனகா நரேஷ் அங்குள்ள மாணவர்களுக்கு சங்கீதம் சொல்லித் தருகிறார். பல படைப்புகளை மொழி பெயர்த்து வருகிறார். இணைய வழியாக பல இலக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார் . தன் இனிமையான குரலால் பாடி வருகிறார். இவரின் முதல் நூலான இமைத்தூரிகை ஓவியங்கள் (Painting of the Eye Lash) ஹைக்கூ நூலாஇரு மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்தியாவில் பிறந்து அமெரிகாவில் வசித்து வரும் இவரின் பார்வையில் இந்திய அமெரிக்க சூழல்களின் செயல்பாடுகள் படைப்புகளாக வெளி வருகின்றன. நிலவை உடைத்து  குளத்தின் மடி சேர்ந்தது  கரையோர கல்  Breaking the moon  it reached the lab of the pond a pebble from its Bank *** பல்வேறு இலக்கிய அமைப்புகளோடு தொடர்பு கொண்டு கவிதைகள் கட்டுரைகள் எழுதி வரும் இவருக்கு திருக்குறள் மீது பேராவல். திருக்குறளை தேசிய நூலாக்க வே...

Tamil Haiku Book 05

படம்
#HaikubookReadingMarathon2024 Book 05 நூல்: இமயக்கல் நூலாசிரியர்: வெ.கலிவரதன், புதுச்சேரி நூல் வகை: ஹைக்கூ பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965 பக்கங்கள்:64 விலை₹80/- மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கும் கவிஞர் வெ_கலிவரதன் புதுச்சேரியை சேர்ந்தவர் ஆன்மீக பயணத்தில் அதிக பழமையான கோயில்களை கட்டுரையாக எழுதி இதழ்களில் பதிப்பிப்பதை தலையாக கடமையாக செய்து வருபவர். மொழிபெயர்ப்பு, புதுக்கவிதைகள், ஹைக்கூ என அனைத்திலும் இயங்கி வருபவர், நாற்று, ஈரம் ஆகிய இதழ்களின் பொறுப்பாசிரியர். தன் முழு நேர ஓய்வையும் இல்லத்திற்காகவும் இலக்கியத்திற்காகவும் பங்கிட்டு நற்செயல்களை செய்து வருபவர். இவரின் அண்மைத் தொகுப்பு # இமயக்கல் . சிறுவயதில் தான் கேட்ட பழங்கதைகளை மீட்டெடுத்து ஒவ்வொரு கதைகளையும் இந்த இமயக்கல்லில் கவிதையாக சொல்ல முயன்றிருக்கிறார். இது நம்மை கால இயந்திரத்தின் மூலம் தொன்ம காலத்துக்கு அழைத்துச் செல்லும் என்பதிலும் ஐயமில்லை. *** கைம்மைக் கோலத்தில் திருநங்கையர் களபலியில் அரவான் * பூதக்கணங்களின் மகிழ்வு சிவனார் தாண்டவம் சுடுகாட்டு மேடை * தாய்ப்பால் புகட்ட...

Tamil haiku book 04

படம்
#HaikubookReadingMarathon2024 Book04 நூல்: இந்தக் கோமாளிகளுக்கு உங்களைப் பற்றி தெரியாது நூலாசிரியர்: மாமத யானை , புதுச்சேரி நூல் வகை: சென்ரியு பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965 பக்கங்கள்:108 விலை₹130/- புதுச்சேரியில் வசிக்கும் முனைவர் வே. மணிகண்டன் "மாமதயானை" என்ற புனைப் பெயரில் எழுதி வருபவர். விழுப்புரத்தில் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர். ஹைக்கூ கவிதைகளை காட்டிலும் சென்ரியு மீது தனித்த காதல் கொண்டு அதிக நூல்களை எழுதி உள்ளவர் சென்ரியு குறித்த கட்டுரை நூலையும் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகளில் பலரின் ஹைக்கூ மற்றும் அதன் கிளை வடிவ வகைகளை அறிமுகம் செய்து வருகிறார். அவரின் சமீபத்திய சென்ரியு கவிதை நூல் #இந்தக்கோமாளிகளுக்கு #உங்களைப்பற்றி_தெரியாது. இந்த நூலில் நூற்றுக்கும் மேற்பட்ட சென்ரியு வகை கவிதைகள் இடம் பெற்றுள்ளன புதிதாக சென்ரியு எழுதுபவர்களுக்கு என்று சில புரிதல்களை இந்நூலில் கட்டுரையாக பதிவிட்டுள்ளார். *** கத்திக்குத்து வாங்கியவன் பயந்து நடுங்குகிறான் ஊசி குத்தும் தருணம் ...

Tamil haiku book 03

படம்
#HaikubookReadingMarathon2024 Book03 நூல்: அறுவடைக் குருவிகள் நூலாசிரியர்: கல்லை மலரடியான், கள்ளக்குறிச்சி நூல் வகை: ஹைக்கூ பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965 பக்கங்கள்:88 விலை₹110/- தமிழ் ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் இருந்து ஓய்வு பெற்ற எழுத்தாளர் கந்தசாமி (எ) கல்லை மலரடியான் அவர்களின் சமீபத்திய ஹைக்கூ நூல் #அறுவடைக்_குருவிகள். இவர் சிறுவர் பாடல்கள், சிறுவர் கதைகள், புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் என அனைத்து வகைமைகளிலும் எழுதி வருபவர் . அண்மையில் தமிழ்நாடு அரசு இவரின் #சிறார்_நலம்_தேடு நூலுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக சிறந்த சிறார் நூல் பரிசு வழங்கி சிறப்பித்து இருக்கிறது. இந்த ஹைக்கூ நூலில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் இடம்பெற்று இருக்கின்றன. ஒன்றோடு ஒன்று விஞ்சும் அளவிற்கு இயற்கையின் நுட்பத்தை தன் கேமரா கண்களால் படம் பிடித்து இருக்கிறார். இருக்கிறது வானம் விதைப்பந்தை வீச வளர்த்தெடுக்கும் மழை விலங்குகள் பறவைகள் இயற்கையாகவே மரங்களை வளர்த்தெடுக்கின்றன. மனிதரில் ஒருசிலர் இயற்கைக்கு தன்னாலான செயல்களை செய்து வருகிறார்கள் அதில் ம...

Tamil haiku book 02

படம்
நூல்: : அடர்வன மின்மினி நூலாசிரியர்: செ.கலைவாணி பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965 பக்கங்கள்:80 விலை₹110/- ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வரும் நூலாசிரியர் தொகுப்பு நூல்களில் எழுதி வருகிறார். முகநூலில் பல பரிசுகளும் பெற்று வருகிறார்.  இவரின் முதல் தொகுப்பான இந்த #அடர்வன_மின்மினி ஹைக்கூ நூல் பல்வேறு காலகட்ட அனுபவக் கூறுகளை ஒன்றிணைத்து இருக்கிறது. ஏரி நீர் காற்றசைக்க ஆடும் வட்ட நிலா இயற்கை தான் ஹைக்கூவின் முக்கிய கருப்பொருள் என்றாலும் மானுட செயற்பாடுகளை பாடுவதிலும் தமிழ் ஹைக்கூ கவிதைகள் முன்னிலை வகிக்கின்றன.  தேர்தல் மேடை அலைமோதும் மக்கள்  பிரியாணி பொட்டலம் இந்த விதத்தில் இந்த நூலில் பல மானுட செயற்பாட்டு கவிதைகள் அதிகம் இடம் பெற்று ஹைக்கூவோடு சென்ரியு கவிதைகளும் கலந்து இருக்கின்றன. அடர்வன மின்மினி #வெளிச்சம்

Tamil haiku book 01

படம்
நூல்: அசையும் வெண் மேகங்கள்  (white clouds moving) bilingual Haiku poems நூலாசிரியர்: முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965 பக்கங்கள்:80 விலை₹110/- தமிழ்ப் படைப்புலகில் ஹைக்கூ கவிதைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. "இதுதான் ஹைக்கூ" என முதல் ஹைக்கூ கட்டுரையை வெளியிட்ட பேராசிரியர் தி.லீலாவதி முதல் இன்று வரை பல பெண் படைப்பாளிகள் ஹைக்கூ குறித்த கவிதைகளும் கட்டுரைகளும் கிளை வடிவங்களிலும் எழுதி வருகிறார்கள். சென்னையில் வசித்து வரும் முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இதுவரை ஆறு நூல்களை வெளியிட்டுள்ள இவரின் ஏழாவது நூல் "அசையும் வெண் மேகங்கள்". இதிலுள்ள ஹைக்கூ கவிதைகளைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதி இருக்கிறார். ஹைக்கூ என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது... இதனை உணர்ந்த நூலாசிரியர் பல்வேறு கருப் பொருட்களை உள்ளடக்கிய படைப்பாக இந்த நூலை படைத்திருக்கிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக... பூ மேல் பட்டாம்பூச்சி கல்லெறிந்ததும் கீழே விழுகிறது பனித்துளி *** Butterfly over the flower As...

Nooleni publications Haiku Festival 04

படம்
எட்டு எட்டாக நான்காம் எட்டு.... எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ நீ எந்த எட்டில் இப்ப இருக்க தெரிஞ்சுக்கோ - #வைரமுத்து ஹைக்கூ தந்தை மட்சுவோ பாஷோ 380 பிறந்த நாள் விழா கொண்டாட்டம் உங்கள் படைப்புகளை நூலாக்கி கொண்டாடலாம் வாங்க நூலேணி பதிப்பகம் ,சென்னை 9841236965 நான்காவது எட்டில் 1. பனித்துளியில் பாதயாத்திரை ரா.பிரேம் சுரேஷ், நீலகிரி 2. தெருவெங்கும் மகிழம்பூ புதுகை ஆதீரா, புதுக்கோட்டை 3. தூவானம் கவிதைகள் கவி.செங்குட்டுவன், ஊத்தங்கரை 4. முடி முளைத்த பாறைகள் ஷமீகா ஷம்ரீன், கம்பம் 5. பாரம் சுமக்கும் கூடை சோ.ஸ்ரீதரன், இலங்கை 6. தவம் செய்யும் ஞானக் கொக்கு விகந்தன்,  சென்னை 7. முந்திரிக்கொட்டை புதுவைத் தமிழ்நெஞ்சன், புதுச்சேரி 8. ஷிகி காலத்து ஹைக்கூ கன்னிக்கோவில் இராஜா, சென்னை 

Nooleni publications Haiku Festival 03

படம்
எட்டு எட்டாக மூன்றாம் எட்டு.... எட்டு எட்டா  மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ நீ எந்த எட்டில் இப்ப இருக்க தெரிஞ்சுக்கோ - # வைரமுத்து   ஹைக்கூ தந்தை மட்சுவோ பாஷோ  380 பிறந்த நாள் விழா கொண்டாட்டம் உங்கள் படைப்புகளை நூலாக்கி கொண்டாடலாம் வாங்க நூலேணி பதிப்பகம் ,சென்னை  9841236965 மூன்றாவது எட்டில்  1. அவளும் நானும்   மேனகா நரேஷ், சாய் சஞ்சனா, அமெரிக்கா  2. வழியெங்கும் வியர்வைத் துளிகள் வேலாயுதம் ந, சென்னை  3. முள்முனை தவம்   ஆ.தமிழ்மலர், சிதம்பரம்  4. துளிர்க்கும் துளிப்பா  தமிழ்த்தாகம் பகவதி, செங்கல்பட்டு  5. நிழல் இலைகள்  சுபாதேவி, மஸ்கட்  6. கூடு துறந்த பறவை  முனைவர் பொன்.திலகவதி, புதுச்சேரி  7. ஹாரிங்டன் சாலை  ஹாரிங்ன் ஹரிஹரன், சென்னை  8. அருகம்புல் பனித்துளிகள்  காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

Nooleni publications Haiku Festival 02

படம்
எட்டு எட்டாக இரண்டாம் எட்டு.... எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ நீ எந்த எட்டில் இப்ப இருக்க தெரிஞ்சுக்கோ - #வைரமுத்து ஹைக்கூ தந்தை மட்சுவோ பாஷோ 380 பிறந்த நாள் விழா கொண்டாட்டம் உங்கள் படைப்புகளை நூலாக்கி கொண்டாடலாம் வாங்க நூலேணி பதிப்பகம் ,சென்னை 9841236965 இரண்டாம் எட்டில் 1. உயிர்த்தெழும் சிந்தனைகள் கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை 2. இந்த விதையில் எந்த மரம் சோ.கு.செந்தில்குமரன், புதுச்சேரி 3. தெப்பக்காடு பொள்ளாச்சி குமாரராஜன் 4. அந்துப் பூச்சியின் எச்சில் விகந்தன், சென்னை 5. மழைத்துளியில் தொங்கும் சூரியன் சிரா.செல்வகுமார் ,பேராவூரணி 6. சாளரம் வழியே சூரியன் கல்பனா சுரேன், அமெரிக்கா 7. கானல் நீர் மீன்கள் நா.நடராஜன்,  கோயம்புத்தூர 8. மௌனத்திற்கு வெகு அருகே ப.சிவராமன், சென்னை

Nooleni publications Haiku Festival 01

படம்
எட்டு எட்டாக முதல் எட்டு.... @@@ எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ நீ எந்த எட்டில் இப்ப இருக்க தெரிஞ்சுக்கோ - #வைரமுத்து ஹைக்கூ தந்தை மட்சுவோ பாஷோ 380 பிறந்த நாள் விழா கொண்டாட்டம் உங்கள் படைப்புகளை நூலாக்கி கொண்டாடலாம் வாங்க நூலேணி பதிப்பகம் ,சென்னை 9841236965 முதல் எட்டில் 1. நெல்லையப்பர் வீதி நெல்லை அன்புடன் ஆனந்தி, அமெரிக்கா 2. அழகான ஆச்சரியம் நீ வடகரை அ.அம்மார் உசேன் 3. தென்பெண்ணை ஆற்றின் கிளையாறு பிச்சிப்பூ, கேரளா 4. நூலகம் இல்லா வீடு பெரணமல்லூர் சேகரன், திருவண்ணாமலை 5. மதுக்கடையில் கொலுசொலி முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி, சென்னை 6. சென்ரியு சில புரிதல்கள் முனைவர் வே மணிகண்டன், புதுச்சேரி 7. வானம் பருகும் குளம் அகவலன்,  சென்னை 8. கைகளில் ஒளிந்திருக்கும் கடவுள் க. ஜெய் விநாயக ராஜா, புதுச்சேரி

Basho's 380th birthday Release 06

படம்
Basho's 380th birthday Release 06 நூல்: மதுக்கடையில் கொலுசொலி நூலாசிரியர்: முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி வகை: இரு மொழிகளில் சென்ரியுக் கவிதைகள் பதிப்பகம்: நூலேணி பதிப்பகம், சென்னை சென்னையில் பள்ளி ஆசிரியராக பணிபுரியும் இவர் முகநூலிலும் இணைய இதழ்களிலும் ஹைக்கூ மற்றும் கிளை வடிவங்களை எழுதி வருகிறார். அச்சு நூலாகவும் இணைய நூலாகவும் வெளியிட்டு வருகிறார் தான் எழுதிய படைப்புகளுக்காக பரிசுகளையும் விருதுகளையும் பெற்று வருகிறார். ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, கட்டுரைகள் எனப் பல்வேறு வகைமைகளில் எழுதி வரும் இவரின் அண்மை படைப்பு இந்தச் சென்ரியு நூல். ஹைக்கூவின் தந்தை பாசோவின் 380 வது பிறந்தநாளைக் (1644-2024 ) கொண்டாடும் வகையில் நூலேணி பதிப்பகம் பதிப்பிக்கிறது. #haikupoet #bashobirthday #haikupoem #senryu #noolenipublications #kannikovilraja

Basho's 380th birthday Release 05

படம்
Basho's 380th birthday Release 05 நூல்: நூலகம் இல்லா வீடு நூலாசிரியர்: பெரணமல்லூர் சேகரன் வகை: ஹைக்கூக் கவிதைகள் பதிப்பகம்: நூலேணி பதிப்பகம், சென்னை திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன் அவர்கள் தமுஎகசவில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு சமூகப் பணியாற்றி வருகிறார். தான் எழுதிய நூல்களுக்காக பரிசுகளையும் விருதுகளையும் பெற்று வருகிறார். ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, சிறுகதைகள், சிறார் இலக்கியம்  எனப் பல்வேறு வகைமைகளில் எழுதி வரும் இவரின் அண்மை படைப்பு இந்த ஹைக்கூ நூல். ஹைக்கூவின் தந்தை பாசோவின் 380 வது பிறந்தநாளைக் (1644-2024 ) கொண்டாடும் வகையில் நூலேணி பதிப்பகம் பதிப்பிக்கிறது. #haikupoet #bashobirthday #haikupoem #pitchipoo #noolenipublications #kannikovilraja

Basho's 380th birthday Release 04

படம்
Basho's 380th birthday Release 04 நூல்: தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறு நூலாசிரியர்: பிச்சிப்பூ (எ) சங்கீதா பிரபு வகை: லிமரைக்கூ கவிதைகள் பதிப்பகம்: நூலேணி பதிப்பகம், சென்னை விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து கேரளாவில் வசிக்கும் கவிஞர் பிச்சிப்பூ அவர்களின் மூன்றாவது நூல். தான் பிறந்து தவழ்ந்த தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆற்றை தன் நூலுக்கு தலைப்பாக வைத்திருக்கிறார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட லிமரைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, காதல் கவிதைகள், கஜல், சிறார் இலக்கியம்  எனப் பல்வேறு வகைமைகளில் எழுதி வரும் இவரின் அண்மை படைப்பு இந்த லிமரைக்கூ நூல். ஹைக்கூவின் தந்தை பாசோவின் 380 வது பிறந்தநாளைக் (1644-2024 ) கொண்டாடும் வகையில் நூலேணி பதிப்பகம் பதிப்பிக்கிறது. #haikupoet #bashobirthday #haikupoem #pitchipoo #noolenipublications #kannikovilraja

Basho's 380th birthday Release 03

படம்
நூல் அறிமுகம் 03 நூல்: சென்ரியு சில புரிதல்கள் நூலாசிரியர்: பேரா. மணிகண்டன் வகை: சென்ரியு கட்டுரைகள் பதிப்பகம்: நூலேணி பதிப்பகம், சென்னை தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் மணிகண்டன் அவர்கள் மாமத_யானை என்ற புனைபெயரில் நூல்கள் எழுதி வருகிறார். ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, காதல் கவிதைகள், ஆய்வு கட்டுரை நூல்கள் எனப் பல்வேறு வகைமைகளில் எழுதி வரும் இவரின் அண்மை படைப்பு "சென்ரியு சில புரிதல்கள்" சென்ரியு குறித்து அறிந்து கொள்வதற்குக் கையேடாக வந்துள்ளது இந்த நூல். ஹைக்கூவின் தந்தை பாசோவின் 380 வது பிறந்தநாளைக் (1644-2024) கொண்டாடும் வகையில் நூலேணி பதிப்பகம் பதிப்பிக்கிறது. #bashobirthday #haikupoem #mamathayaanai #noolenipublications #kannikovilraja

Basho 380th birthday Release 02

படம்
நூல்: 2 நூல்: #கைகளில்_ஒளிந்திருக்கும்_கடவுள்  நூலாசிரியர்: க. ஜெய் விநாயக ராஜா புதுச்சேரி வகை: ஹைக்கூ  பதிப்பகம்: நூலேணி பதிப்பகம், சென்னை "ஹைக்கூவின் தந்தை" என்று போற்றப்படும் #மட்சுவோ_பாஷோ அவர்களின் 380 வது பிறந்தநாள் (1644-2024) நூலேணி பதிப்பகம்  சார்பாக இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது.  அந்தக் கொண்டாட்டத்தில் 38  கவிஞர்களின் நூல்களை வெளியிட ஆவல் கொண்டுள்ளோம். அதற்கு உங்களின் ஒத்துழைப்பை நாடுகிறோம். நீங்கள் விரும்பினால் உங்கள் கவிதைகளை நூலாக்க பதிவு செய்யலாம். படைப்பாளிகள் அனைவருக்கும் நன்றி #bashobirthday #haikupoem #noolenipublications #kannikovilraja

Basho 380th birthday Release 01

படம்
நூல்: 1 நூல்: நெல்லையப்பர் வீதி நூலாசிரியர்: கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி, அமெரிக்கா வகை:லிமரைக்கூ பதிப்பகம்: நூலேணி பதிப்பகம், சென்னை "ஹைக்கூவின் தந்தை" என்று போற்றப்படும் #மட்சுவோ_பாஷோ அவர்களின் 380 வது பிறந்தநாள் (1644-2024) நூலேணி பதிப்பகம்  சார்பாக இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. #bashobirthday #haikupoem #noolenipublications #kannikovilraja