Tamil haiku book 01

நூல்: அசையும் வெண் மேகங்கள் 

(white clouds moving) bilingual Haiku poems

நூலாசிரியர்: முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி

பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965

பக்கங்கள்:80 விலை₹110/-


தமிழ்ப் படைப்புலகில் ஹைக்கூ கவிதைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. "இதுதான் ஹைக்கூ" என முதல் ஹைக்கூ கட்டுரையை வெளியிட்ட பேராசிரியர் தி.லீலாவதி முதல் இன்று வரை பல பெண் படைப்பாளிகள் ஹைக்கூ குறித்த கவிதைகளும் கட்டுரைகளும் கிளை வடிவங்களிலும் எழுதி வருகிறார்கள்.


சென்னையில் வசித்து வரும் முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இதுவரை ஆறு நூல்களை வெளியிட்டுள்ள இவரின் ஏழாவது நூல் "அசையும் வெண் மேகங்கள்".


இதிலுள்ள ஹைக்கூ கவிதைகளைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதி இருக்கிறார்.


ஹைக்கூ என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது... இதனை உணர்ந்த நூலாசிரியர் பல்வேறு கருப் பொருட்களை உள்ளடக்கிய படைப்பாக இந்த நூலை படைத்திருக்கிறார்.


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக...


பூ மேல் பட்டாம்பூச்சி

கல்லெறிந்ததும் கீழே விழுகிறது

பனித்துளி

***

Butterfly over the flower

As the pebble is thrown falls down

Dew drop


இதுபோல இயற்கை சார்ந்த படைப்புகள் மட்டுமல்லாது மனித மனங்களைச் சார்ந்தும் நிறையக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nooleni Haiku competition 2025

Tamil Haiku new Activity

International haiku poetry day Nooleni Publications