Tamil Haiku Book 05
#HaikubookReadingMarathon2024
Book 05
நூல்: இமயக்கல்
நூலாசிரியர்: வெ.கலிவரதன், புதுச்சேரி
நூல் வகை: ஹைக்கூ
பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965
பக்கங்கள்:64 விலை₹80/-
மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கும் கவிஞர் வெ_கலிவரதன் புதுச்சேரியை சேர்ந்தவர் ஆன்மீக பயணத்தில் அதிக பழமையான கோயில்களை கட்டுரையாக எழுதி இதழ்களில் பதிப்பிப்பதை தலையாக கடமையாக செய்து வருபவர்.
மொழிபெயர்ப்பு, புதுக்கவிதைகள், ஹைக்கூ என அனைத்திலும் இயங்கி வருபவர், நாற்று, ஈரம் ஆகிய இதழ்களின் பொறுப்பாசிரியர்.
தன் முழு நேர ஓய்வையும் இல்லத்திற்காகவும் இலக்கியத்திற்காகவும் பங்கிட்டு நற்செயல்களை செய்து வருபவர். இவரின் அண்மைத் தொகுப்பு #இமயக்கல்.
சிறுவயதில் தான் கேட்ட பழங்கதைகளை மீட்டெடுத்து ஒவ்வொரு கதைகளையும் இந்த இமயக்கல்லில் கவிதையாக சொல்ல முயன்றிருக்கிறார். இது நம்மை கால இயந்திரத்தின் மூலம் தொன்ம காலத்துக்கு அழைத்துச் செல்லும் என்பதிலும் ஐயமில்லை.
***
கைம்மைக் கோலத்தில்
திருநங்கையர்
களபலியில் அரவான்
*
பூதக்கணங்களின் மகிழ்வு
சிவனார் தாண்டவம்
சுடுகாட்டு மேடை
*
தாய்ப்பால் புகட்டி
உயிரிழந்தால் பூதகி
கண்ணன் விஷ(ம)ம்
***
இப்படி புராணக் கதைகளை ஹைக்கூவாக மாற்றும் முயற்சியில் வெளிவந்துள்ளது இந்த நூல்
கருத்துகள்
கருத்துரையிடுக