Tamil Haiku book 11

#HaikubookReadingMarathon2024

Book 11

நூல்: ஈஸ்வரன் தர்மராஜா கோயில் தெரு
நூலாசிரியர்: கலைமாமணி பாரதி வசந்தன், புதுச்சேரி
நூல் வகை: ஹைக்கூ
பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965
பக்கங்கள்:64. விலை₹80/-




தமிழ் ஹைக்கூ உலகம் தோன்றி நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டாலும், ஹைக்கூ நூல்கள் வெளியாகி நாற்பது ஆண்டுகள்தான் ஆகின்றன.

இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் அதிக நூல்கள் வெளியாகின்றன என்ற செய்தி மனத்திற்கு மகிழ்ச்சி தந்தாலும், இன்றளவும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான ஹைக்கூ, சென்ரியு குறித்த புரிதல்கள் குறைவாகவே இருக்கின்றன. ஆயினும் 25க்கும் மேற்பட்ட சென்ரியு நூல்களும் வெளிவந்திருக்கின்றன என்பதும் சுட்டத்தக்கது.

தமிழில் முன்னத்தி ஏராக விளங்கக்கூடிய கலைமாமணி பாரதி வசந்தன் அவர்கள் புதுச்சேரியின் முதல் சென்ரியு தொகுப்பை வெளியிட்ட பெருமைக்குரியவர். தொடர்ந்து பல தளங்களில் இயங்கி வருபவர்.

பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடின்றி இலக்கிய நண்பர்களோடு தொடர்பில் இருப்பவர்.இவரின் பல ஹைக்கூ கவிதைகளை இதழ்களிலும், ஆய்வு நூல்களிலும் கண்டு ரசித்திருக்கிறேன்.

நூலேணி பதிப்பகம் பதிப்பித்த பல ஹைக்கூ தொகுப்பு நூல்களில் கலந்து கொண்டதோடு, உடல்நலக் குறைவு நேரத்திலும் உலகத் துளிப்பா (ஹைக்கூ) மாநாட்டில் மகாகவி பாரதியை நினைவுகூரும் வகையில் அவர் புதுச்சேரியில் வாழ்ந்த இல்லத்தையும், தெருப் பெயரையும் முகப்பு அட்டைப் படமாக கொடுத்திருக்கிறார்.

அவருக்கு வாழ்த்துகள்.

ஒரு பானைக்கு ஒரு சோறு பதமாக...

குழலிசையில் கண்மயங்க
பூமிக்கும் ஆசை
முளைத்தன மூங்கில்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nooleni Haiku competition 2025

Tamil Haiku new Activity

International haiku poetry day Nooleni Publications