Tamil haiku book 03

#HaikubookReadingMarathon2024
Book03

நூல்: அறுவடைக் குருவிகள்
நூலாசிரியர்: கல்லை மலரடியான், கள்ளக்குறிச்சி
நூல் வகை: ஹைக்கூ
பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965
பக்கங்கள்:88 விலை₹110/-



தமிழ் ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் இருந்து ஓய்வு பெற்ற எழுத்தாளர் கந்தசாமி (எ) கல்லை மலரடியான் அவர்களின் சமீபத்திய ஹைக்கூ நூல் #அறுவடைக்_குருவிகள்.

இவர் சிறுவர் பாடல்கள், சிறுவர் கதைகள், புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் என அனைத்து வகைமைகளிலும் எழுதி வருபவர் .

அண்மையில் தமிழ்நாடு அரசு இவரின் #சிறார்_நலம்_தேடு நூலுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக சிறந்த சிறார் நூல் பரிசு வழங்கி சிறப்பித்து இருக்கிறது.

இந்த ஹைக்கூ நூலில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் இடம்பெற்று இருக்கின்றன.

ஒன்றோடு ஒன்று விஞ்சும் அளவிற்கு இயற்கையின் நுட்பத்தை தன் கேமரா கண்களால் படம் பிடித்து இருக்கிறார்.

இருக்கிறது வானம்
விதைப்பந்தை வீச
வளர்த்தெடுக்கும் மழை

விலங்குகள் பறவைகள் இயற்கையாகவே மரங்களை வளர்த்தெடுக்கின்றன. மனிதரில் ஒருசிலர் இயற்கைக்கு தன்னாலான செயல்களை செய்து வருகிறார்கள் அதில் முதன்மையானது தான் இந்த விதைப்பந்துகள்தான்.

சமூகச் சிக்கலை கவிதைகளில் பதிவு செய்வது மிக முக்கியமானது என்பதை உணர்ந்தவர்கள் படைப்பாளர்கள். இவரும் தன் பங்குக்காக...

வேடிக்கை பார்க்கிறது
இரட்டைத் தேநீர்க்குவளை
சமத்துவபுரம்

இப்படி பல நுண்ணியக் காட்சிகளை கவிதைகளாக எழுதி இருக்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nooleni Haiku competition 2025

Tamil Haiku new Activity

International haiku poetry day Nooleni Publications