Tamil hiku book 06

#HaikubookReadingMarathon2024
Book 06

நூல்: இமைத்தூரிகை ஓவியங்கள் 
Painting of the eye lash
நூலாசிரியர்: மேனகா நரேஷ், அமெரிக்கா
நூல் வகை: இருமொழி ஹைக்கூ 
பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965
பக்கங்கள்:68. விலை₹80/-



அமெரிக்காவில் வசிக்கும் கவிஞர் மேனகா நரேஷ் அங்குள்ள மாணவர்களுக்கு சங்கீதம் சொல்லித் தருகிறார். பல படைப்புகளை மொழி பெயர்த்து வருகிறார்.

இணைய வழியாக பல இலக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார் . தன் இனிமையான குரலால் பாடி வருகிறார்.

இவரின் முதல் நூலான இமைத்தூரிகை ஓவியங்கள் (Painting of the Eye Lash) ஹைக்கூ நூலாஇரு மொழிகளில் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் பிறந்து அமெரிகாவில் வசித்து வரும் இவரின் பார்வையில் இந்திய அமெரிக்க சூழல்களின் செயல்பாடுகள் படைப்புகளாக வெளி வருகின்றன.

நிலவை உடைத்து 
குளத்தின் மடி சேர்ந்தது 
கரையோர கல் 

Breaking the moon 
it reached the lab of the pond
a pebble from its Bank
***

பல்வேறு இலக்கிய அமைப்புகளோடு தொடர்பு கொண்டு கவிதைகள் கட்டுரைகள் எழுதி வரும் இவருக்கு திருக்குறள் மீது பேராவல். திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் என பல கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.

ஹைக்கூ குறித்த புரிதலோடு பயணம் செய்பவரின் இந்த நூல், இவரின் இலக்கியப் பயணத்தில் துணையாக வருகிறது.

பறவை பறந்த பின்னும் 
மரத்தில் அதன் இருப்பு 
உதிர்ந்த இறகுகள் 

Even after the bird is gon
It's presents is felt in the tree 
Fallen feathers 
***
இப்படி நூல் முழுவதும் வாசகன் அமர இடம் விட்டு அமர்ந்திருக்கின்றன ஹைக்கூ கவிதைகள்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nooleni Haiku competition 2025

Tamil Haiku new Activity

International haiku poetry day Nooleni Publications