Tamil haiku book 02
நூல்: : அடர்வன மின்மினி
நூலாசிரியர்: செ.கலைவாணி
பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965
பக்கங்கள்:80 விலை₹110/-
ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வரும் நூலாசிரியர் தொகுப்பு நூல்களில் எழுதி வருகிறார். முகநூலில் பல பரிசுகளும் பெற்று வருகிறார்.
இவரின் முதல் தொகுப்பான இந்த #அடர்வன_மின்மினி ஹைக்கூ நூல் பல்வேறு காலகட்ட அனுபவக் கூறுகளை ஒன்றிணைத்து இருக்கிறது.
ஏரி நீர்
காற்றசைக்க ஆடும்
வட்ட நிலா
இயற்கை தான் ஹைக்கூவின் முக்கிய கருப்பொருள் என்றாலும் மானுட செயற்பாடுகளை பாடுவதிலும் தமிழ் ஹைக்கூ கவிதைகள் முன்னிலை வகிக்கின்றன.
தேர்தல் மேடை
அலைமோதும் மக்கள்
பிரியாணி பொட்டலம்
இந்த விதத்தில் இந்த நூலில் பல மானுட செயற்பாட்டு கவிதைகள் அதிகம் இடம் பெற்று ஹைக்கூவோடு சென்ரியு கவிதைகளும் கலந்து இருக்கின்றன.
அடர்வன மின்மினி #வெளிச்சம்
கருத்துகள்
கருத்துரையிடுக