Tamil Haiku book 07
#HaikubookReadingMarathon2024
Book 07
நூல்: இயற்கைக்கு இணக்கமானவன்
நூலாசிரியர்: க.ஜெய் விநாயக ராஜா, புதுச்சேரி
நூல் வகை: ஹைக்கூ
பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965
பக்கங்கள்:104 விலை₹150/-
மதுரையில் பிறந்து புதுச்சேரியில் வசிக்கும் இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் கவிஞர் #ஜெய்_விநாயக_ராஜா.
ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ என ஹைக்கூவின் வகைமைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த #இயற்கைக்கு_இணக்கமானவன் ஹைக்கூ நூல் இவரின் முதல் நூல். இந்த நூலில் புதுச்சேரி மக்களின் பண்பாடும் இயற்கை சூழலும் மையப் பொருளாக மாறி இருக்கின்றன. அதிலும் சிறார் குறித்த படிப்புகளும் சரிசமமாக இருக்கின்றன.
***
தெருமுனை கடக்கும் குழந்தை
மெல்ல மெல்ல மறைந்தது
புன்னகை
***
ஒவ்வொரு கவிதைக்கும் அதற்குரிய ஒளிப்படம் தேடி எடுத்து பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.
***
வேதனையில் அப்பா
மகிழ்ச்சியில் குழந்தை
ஒழுகும் வீடு
***
பலருக்கும் அறிமுகமான இந்தக் காட்சி கவிதையாக மாறும் போது ரசிக்க அல்லது வேதனை பட வைத்து விடுகிறது.
தொடர்ந்து இந்த நூலில் இது போன்ற பல கவிதைகள் இடம் பெற்றிருப்பது கவனத்திற்குரியது
கருத்துகள்
கருத்துரையிடுக