Tamil haiku book 04
#HaikubookReadingMarathon2024
Book04
நூல்: இந்தக் கோமாளிகளுக்கு உங்களைப் பற்றி தெரியாது
நூலாசிரியர்: மாமத யானை, புதுச்சேரி
நூல் வகை: சென்ரியு
பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965
பக்கங்கள்:108 விலை₹130/-
புதுச்சேரியில் வசிக்கும் முனைவர் வே. மணிகண்டன் "மாமதயானை" என்ற புனைப் பெயரில் எழுதி வருபவர். விழுப்புரத்தில் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர்.
ஹைக்கூ கவிதைகளை காட்டிலும் சென்ரியு மீது தனித்த காதல் கொண்டு அதிக நூல்களை எழுதி உள்ளவர் சென்ரியு குறித்த கட்டுரை நூலையும் வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகளில் பலரின் ஹைக்கூ மற்றும் அதன் கிளை வடிவ வகைகளை அறிமுகம் செய்து வருகிறார்.
அவரின் சமீபத்திய சென்ரியு கவிதை நூல் #இந்தக்கோமாளிகளுக்கு #உங்களைப்பற்றி_தெரியாது. இந்த நூலில் நூற்றுக்கும் மேற்பட்ட சென்ரியு வகை கவிதைகள் இடம் பெற்றுள்ளன புதிதாக சென்ரியு எழுதுபவர்களுக்கு என்று சில புரிதல்களை இந்நூலில் கட்டுரையாக பதிவிட்டுள்ளார்.
***
கத்திக்குத்து வாங்கியவன்
பயந்து நடுங்குகிறான்
ஊசி குத்தும் தருணம்
ஆயுள் கெட்டி
உடைந்து போனது
விஷப்பூட்டி
விபத்துப் பகுதி
பார்க்காமல் செல்லவும்
மகளிர் கல்லூரி
***
ஹைக்கூவும் சென்ரியுவும் ஒன்று போலவே தோற்றமளித்தாலும் சென்ரியு தனித்து தெரிவதற்கான பல சாத்திய கூறுகள் இருக்கின்றன. அதை அடையாளம் காணும் முயற்சியில் கவிஞர்கள் ஈடுபட்டால் இன்னும் தனித்த நூல்கள் பெருக்கமடையும்.
தன்னளவில் இந்நூல் தன்னை சார்ந்தவர்களுக்கு துணை புரிகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக