Tamil hiku book 08

#HaikubookReadingMarathon2024

Book 08
 
நூல்: இலையில் பனித்துளி
நூலாசிரியர்: மகிமா, சென்னை 
நூல் வகை: ஹைக்கூ 
பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965
பக்கங்கள்:64 விலை₹80/-


தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று புகழப்படும் சங்க காலம் பெண்பாற் புலவர்களால் நிரம்பியது. தமிழ் உலகிற்கு தம் கவிதைகளால் மலரச் செய்த அவர்களின் பெயர்கள், அவர்தம் படைப்புகள் மூலமே சுட்டப்பட்டன. ஒளவையார்.காக்கைப் பாடினியார், வெள்ளிவீதியார் எனப் பலரையும் இக்காலத்தில் அறிந்து வைத்திருக்கிறோம்.

சமகால இலக்கியத்திலும் பல பெண் கவிஞர்கள் அதிகரித்து வருகின்றனர். கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள் ஆய்வு நூலை வடிவக்கும் பணி மூலம் அறிமுகம் ஆனவர்தான் கவிஞர் #மகிமா (எ) #மகேஸ்வரி அவர்கள். 

இவர் ஆய்வுக் கட்டுரைகளோடு. கவிதைகள், ஹைக்கூ. லிமரைக்கூ . நூல்விமர்சனம் நிகழ்ச்சி தொகுப்பு செய்தல் எனப் பன்முகம் கொண்டு விளங்குபவர். இவரின் ஹைக்கூ கவிதைகளை #இலையில்_பனித்துளி என்ற தலைப்பில் நூலாக கொண்டு வந்துள்ளார்
***
மாம்பழங்கள் பறிக்கையில் மரக்கிளையில் ஓடியது
முதலில் சுவைத்த அணில்
***

இயற்கையோடு இயைந்திருப்பதே நல்வாழ்க்கை. ஆனால் மனித மனம் அவ்வாறு முயன்றுகூட பார்ப்பதில்லை. இந்தக் கவிதையிலும் மூன்றாவது வரி நம்மை வியக்க வைக்கிறது. நாம் மாம்பழங்களை பறிக்கிறோம்; ஆனால் நமக்கு முன்னால் சுவைத்து பார்க்கிறது அணில் இப்போது அதற்கும் தடை விதிக்கும் வண்ணமாக மருந்தைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். மூன்று வரிகள் தான் என்றாலும் எத்தனை எத்தனை ஞாபகத் தழும்புகளை நம்முள்ளே போட்டுப் போகிறது இந்தக் கவிதை.
***
தவளைக் குதிக்கும் சத்தம் 
இருண்டக் குளத்தில் 
உடைந்த நிலவு
***
ஹைக்கூ கவிதைகள் சாதாரணப் பார்வையில் மிக நுட்பமான விடயங்களைப் படம்பிடிப்பது. நறுக்கத் தெரித்த வார்த்தைகளை வாசக விழிகளுக்கு விருந்து படைப்பது. இவரும் தான் கண்ட காட்சிகளை கவிதைகளாக்கி இருக்கிறார். அதில் பல விதை நெல்மணிகள் இருப்பது மனத்திற்கு மகிழ்வளிக்கிறது

kannikovil Raja 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nooleni Haiku competition 2025

Tamil Haiku new Activity

International haiku poetry day Nooleni Publications