A new attempt in the history of Tamil haiku
தமிழ் ஹைக்கூ வரலாற்றில் புதிய முயற்சி
புதுச்சேரி, தமிழ்நாடு, அமெரிக்கக் கவிஞர்களின் தொடர் ஹைக்கூ நூல்கள் வெளியீடு
தமிழ் ஹைக்கூ வரலாற்றில் பல புதிய முயற்சிகள் நடந்த வண்ணமே இருக்கிறது. ஹைக்கூ பொட்டலம், காதல் என்ற சொல் வராத ஹைக்கூ நூல், பனி, மது போன்ற பாடுபொருள்களைக் கொண்ட ஹைக்கூ நூல்கள், கட்ரைவிரல் அளவு ஹைக்கூ நூல், விசிட்டிங் கார்டில் ஹைக்கூ, அஞ்சல் அட்டை, உள்ளூர் அஞ்சல் (இன்லேண்ட் லெட்டர்) அரிசியில் ஹைக்கூ, சாவிக்கொத்தில் ஹைக்கூ, விசிறியில் ஹைக்கூ, தேநீர்க் குவளையில் ஹைக்கூ, கையடக்க ஹைக்கூ நூல், சட்டை பேட்ஜ் ஹைக்கூ, ஹைக்கூ நூலோடு கைக்குட்டை என இன்னும் இன்னும் பலவற்றில் புதிய முயற்சியாக ஹைக்கூ கவிஞர்கள் செய்தவண்ணமே இருக்கிறார்கள்.
தமிழ் ஹைக்கூ தடத்தில் பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் மற்றும் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா இணைந்து ஹைக்கூ (துளிப்பா) நிகழ்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் ஹைக்கூ நூற்றாண்டை (1916-2016) வரவேற்று புதுச்சேரியில் அதன் நிறைவை சென்னையிலும் நடத்தியது.
துளிப்பாத் திருவிழாவை பல்வேறு ஆண்டுகளாக நடத்தி வருவது. துளிப்பா நாளிதழ், கிழமை இதழ், வார இதழ் நடத்தியது: தொகுப்பு நூல்கள் பலவற்றை கொண்டு வந்து பல புதிய கவிஞர்களை அறிமுகம் செய்வது; ஹைக்கூ நூல் வெளியான | நாற்பதாவது ஆண்டு கொண்டாட்டத்தை நடத்தி அதில் உலகத் துளிப்பா மாநாடு நடத்தியது; ஹைக்கூவின் தந்தை மட்சுவோ பாஷோ அவர்களின் 380ஆவது பிறந்தநாளுக்கு பல்வேறு கவிஞர்களை ஹைக்கூ நூல்களை கொண்டு வந்தது. உலக ஹைக்கூ கவிதை நாள் கொண்டாட்டம்; ஹைக்கூ நூல்களுக்கான போட்டி நடத்தி பரிசளிப்பது என பல்வேறு நிகழ்வுகளை நூலேணி பதிப்பகத்துடன் இணைந்து, மூவடி, மின்மினி, மழை ஆகிய இதழ்கள் நடத்திக் கொண்டிருப்பது.
அந்த வரிசையில் தமிழ்ஹைக்கூ வரலாற்றில் புதிய முயற்சியாக திருவள்ளுவர் ஆண்டை (2056) மையப்படுத்தி மேழம் (சித்திரை); விடை (வைகாசி); ஆடவை (ஆனி); கடகம் (ஆடி); மடங்கல் (ஆவணி): கன்னி (புரட்டாசி); துலை (ஐப்பசி); நளி (கார்த்திகை); சிலை (மார்கழி); சுறவம் (தை); கும்பம் (மாசி); மீனம் (பங்குனி) ஆகிய தமிழ்க் கிழமைகளில் (மாதங்களில்) ஒவ்வொரு நூலை தமிழ் மாதப் பெயரிலேயே வெளியீடு என முடிவெடுத்து முதல் நூலாக "மேழம்" வெளிவருகிறது. ஒரே நூல் தலைப்பில் பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் புதுச்சேரி எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா (சென்னை-தமிழ்நாடு); கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி (அமெரிக்கா) ஆகியோரது நூல்கள் வெளியாகின்றன.
ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளில் இந்நூல்கள் வெளியாகும். 12 நூல்கள் வெளியானபிறகு அனைத்தும் ஒன்றாக்கி ஒரே நூலாகவும் வெளிவர உள்ளது. இந்த முயற்சி தமிழ் ஹைக்கூவில் புதிய முயற்சி.
இனிவரும் காலங்களில் இதுபோன்றதொரு முயற்சியை மேற்கொள்ளும் கவிஞர்களுக்கு இப்போதே வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக