Tamil Haiku new Activity

தமிழ்_ஹைக்கூ_உலகிற்கு_புதுசு

16 ஆண்டுகளுக்கு முன்னால் மின்மினி ஹைக்கூ இதழை நடத்தி வந்தேன்.

அதன் மூன்றாம் ஆண்டு கொண்டாட்டத்தில் அப்போது தமிழ்நாட்டில் மின்சார சிக்கல் இருந்தது. சென்னையில் நாள்தோறும் ஒரு மணி நேரம் மின்சாரம் தடைபடும்.

கை விசிறியில் ஹைக்கூ: 

அதை கருத்தில் கொண்டு அனைவருக்கும் உறுதியான நெகிழி கைவிசிறியை பரிசளிப்பது என்று முடிவு செய்து அதில் 20 கவிஞர்களின் ஹைக்கூக்களை அச்சிட்டு ஆண்டு விழாவில் அளித்தோம். 


அஞ்சல் அட்டையில் ஹைக்கூ_தொகுப்பு:

அதேபோல ஒரே அஞ்சல்_அட்டையில் பலரின் கவிதைகளைப் பதிப்பித்து  ஹைக்கூ_தொகுப்பு ஒன்றை பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களோடு இணைந்து கொண்டு வந்தேன்


இவை யாவும் தமிழ் ஹைக்கூ உலகிற்கு புதிய விடயங்கள். இப்போது ஹைக்கூவை ஆராதிக்கும் எழுத்தாளர்களுக்கு தெரிவிப்பதற்கான வாய்ப்பாக இந்த படங்கள் அமைந்துள்ளன.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nooleni Haiku competition 2025

International haiku poetry day Nooleni Publications