Tamil kids story
#நூல்அறிமுகம்!
வித்தை_செய்யும்_நத்தை!
Ramya Storyteller
குழந்தைகளிடம் குழந்தையாகப் பழகும் கன்னிக்கோவில் இராஜா அவர்களின் மற்றுமொரு சிறுகதை தொகுப்பு!
குழந்தைகள் விரும்பும் வண்ணம் எட்டு சிறுகதைகளும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. கதைகளுக்கேற்ற ஓவியங்களும் அருமை!
புத்தகத்தின் மற்றும் ஒரு சிறப்பம்சம் குழந்தைகள் கதைகளை காணொலியிலும் கண்டு மகிழ QR CODE இணைக்கப்பட்டுள்ளது. காணொளியின் வழியே சிறப்பாக கதை சொல்லி இருக்கிறார் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி!
1. குருவி_சொன்ன_ரகசியம்
மனிதர்களின் தொந்தரவால் வேற்று மரத்துக்கு மாறிப்போன அணில்களை மீண்டும் வரவழைக்க இரட்டை வால் குருவி சொன்ன ரகசியம் முதல் கதை!
2. #ஆதிராவின்_ஷூ
அன்பான சுட்டிப்பெண் ஆதிரா தொலைந்து போன தன்னுடைய ஒற்றை ஷூ வை செல்ல குட்டி மியாவிடம் இருந்து எப்படி மீட்கிறாள் என்று சொல்கிற கதை!
3. #மகிழ்ச்சி_பரவட்டும்
விலங்குகள் பறவைகளுக்கு மட்டுமின்றி நத்தைகளுக்கும் மகிழ்ச்சி பரவிய கதையை கூறுகிறது.
4. #ஏழாம்_மாடிப்_புறா
அம்மாவின் எச்சரிக்கையை மீறி பறக்க முயற்சித்த புறாக் குஞ்சு ஆபத்தில் மாட்டிக் கொள்வதும் பத்திரமாக மீள்வதும் கூறும் சுவையான கதை!
5. #தூண்டிலில்_மாட்டாத_மீன்கள்
நெகிழியால் மாசடைந்த தங்களுடைய குளத்தை, புத்திசாதுரியத்தால் தவளையின் உதவியுடன் செயலாற்றிய மீன்களைப் பற்றிய சுவாரசியமான கதை!
6. #எறும்பின்_மூங்கில்_வீடு
குட்டி எறும்புகளின் பிடிவாதத்தையும் அதனால் வந்த ஆபத்தையும் அழகாக கூறும் கதை!
7.#ஆட்டம்_காட்டிய_கோழிகள்
அவரவர்க்கு கொடுக்கப்பட்ட வாழ்வை உணர்ந்து மகிழ்ச்சியுடன் உற்சாகத்துடனும் வாழ வழிகாட்டும் கதை!
8.#சொர்க்கத்தை_காட்டிய_கரடி
சொர்க்கம் என்பது....கரடி உணர்த்தும் கதை!
விலை: ₹80/-
வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம்
📞9841236965
கருத்துகள்
கருத்துரையிடுக