amuthabharathy haiku

2005ஆம் ஆண்டு மே மாத இறுதியில் சென்னை தியாகராய நகர் (தி.நகர்) அஞ்சலகத்தின் எதிரே உள்ள மாடியில் ஏறுகிறேன் 

22 படிகளைத் தாண்டி வலது புறத்தில் உள்ள மூன்றாவது அறையின் வாயிலில் நின்று "உள்ளே வரலாமா?" என்று அனுமதி கேட்கிறேன். 

"வாங்க! வாங்க!" என்று ஒரு கனிவான குரல்.

"ஐயா வணக்கம் என் பெயர் கன்னிக்கோவில் இராஜா நான் தொப்புள்_கொடி என்கிற ஹைக்கூ நூலை வெளியிட உள்ளேன். அந்த நூலை நீங்கள் தான் வெளியிட்டு சிறப்பு செய்ய வேண்டும்" என்றேன். 

"நிச்சயமா வரேன்" என்று சொன்னவர், தமிழ்நாட்டின் விருந்தோம்பலான வாசல் வரை வந்து வழியனுப்பியும் வைத்தார் 

வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பாக்கி தந்தார்

அன்று தொடர்ந்த நட்பு 20 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது

#ஓவியக்கவிஞர் #அமுதபாரதி Amudha Bharathy  ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


படத்தில் இடமிருந்து வலமாக: கன்னிக்கோவில் இராஜா, ஓவியக்கவிஞர் அமுதபாரதி, கவிஞர் செல்லம்மா கண்ணன்

நாள்: 25.07.2005 தேவநேயப் பாவாணர் நூலகம், அண்ணா சாலை, சென்னை600002.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nooleni Haiku competition 2025

Tamil Haiku new Activity

International haiku poetry day Nooleni Publications