coimbatore book release
ஆண்டுதோறும் கம்பன் கலைக்கூடம் நடத்தும் விழாவில் ஒரு நூலை வெளியிடுவது வழக்கம்.
கோயமுத்தூரில் வெகு சிறப்பாக நடைபெறும் இந்த விழாவில் சென்னையில் இருந்து வடிவமைத்து அச்சாகி செல்லும் நூல்களின் வாய்ப்பை வழங்கி வருபவர் கவிஞர் சந்திரப்பிரியா
அவரோடு இணைந்து ஒவ்வொரு ஆண்டும் பல படைப்பாளிகள் எனக்கும் அறிமுகமாகி இலக்கிய சாரதிகளாக இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போவதில் சிறுபிள்ளை மகிழ்ச்சியை உணர்கிறேன்.
இதோ இந்த ஆண்டுக்கான புத்தகம் #நான்கு_வழிச்_சா(சோ)லை. இந்த நூலில் ப.ஆறுமுகம், அ.சுமதி, ஜெ.சந்திரப்பிரியா, மற்றும் அனுராதா ஆகிய நான்கு படைப்பாளிகள் சேர்ந்து எழுதிய "சங்க இலக்கியம் சார்ந்த புதுக்கவிதைகள்" இடம்பெற்றிருக்கின்றன.
இந்நூலுக்கு மருத்துவர் சுப்பு, முனைவர் கலையமுதன், வழக்கறிஞர் ரவீந்திரன், முனைவர் செ. பழனியம்மாள் (முதல்வர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி), முனைவர் ப.கீதா (முதல்வர் கே பி ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி) ஆகியோர் வாழ்த்துரை நல்கியுள்ளனர்.
இந்த அழகிய நூலை கவிஞர் கன்னிக்கோவில் இராஜா வடிவமைத்திருக்கிறார் நூலேணி பதிப்பகம் பதிப்பித்து இருக்கிறது.
19.05.2024 ஞாயிறு நூல் வெளியீடு
கருத்துகள்
கருத்துரையிடுக