#நெல்மரப்பறவை
Ambigavathy Saravanan அவர்களின் பதிவு
#வாசகசாலையின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவில் 30.12.2019 அன்றுதான் சந்தித்தேன்...
என்னுடைய உரையின் போது, "நாம் நம் குழந்தைகளுடன் உரையாடுவதற்கான அவசியத்தை, என் வகுப்பில் நடந்த #நெல்மணியைப் பார்த்திராத சென்னை மாணவர்களின் நிகழ்வு ஒன்றோடு ஒப்புமைப்படுத்திக் கூறினேன்.
சிறிது நேரத்திலேயே #நெல்மரப்பறவை
என்னும் தலைப்போடு வந்த இவ்வாசிரியர் "நீங்கள் சொன்ன ஒற்றைச் சொல்லில் உதித்தது என் அடுத்த சிறுகதைக்கான இந்த தலைப்பு"
என்று ஆச்சரியமூட்டினார்... என் பெயரையும், அலைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டு சென்றார். இரண்டு நாட்கள் கழித்து #நெல்மரப்பறவை என்னும் நூலுக்கு #அணிந்துரை எழுதித் தர முடியுமா என்றார்... நெகிழ்ச்சியாக இருந்தது எனக்கு...
#நெல்மரப்பறவையின் எச்சத்தில் தழைக்கட்டும் மானுட அறம்...
(கதையாளனான இவ்வாசிரியர் சிறுவர்களுக்கான சிறுகதைத் தொகுப்புகள் 40, சிறுவர் பாடல்கள் 5 நூல்கள், கட்டுரை, கவிதை என எல்லாத் தளங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்... இதழ்களிலும் எழுதி வருகிறார்...)
கருத்துகள்
கருத்துரையிடுக