******************************* * நூலேணி ஹைக்கூக் கவிதைப் போட்டி 2025 * ******************************* வணக்கம் கவி உறவுகளே! உலக ஹைக்கூக் கவிதை நாளான ஏப்ரல் 17ஆம் நாளை சிறப்பிக்கும் பொருட்டு * நூலேணி ஹைக்கூ கவிதைப் போட்டி 2025 * அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பரிசுத்தொகை ரூபாய் 5,000/- இதுகுறித்த தொலைபேசி உரையாடல்களை தவிர்க்கவும் போட்டி விதிமுறைகள் கவிதையை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் மற்றும் கடைசி தேதி உள்ளிட்ட விபரங்கள் அனைத்தும் அறிவிப்பில் உள்ளன. இந்தத் தகவலை உங்கள் நட்புகளுக்கு தெரிவிக்கவும். வெற்றி பெற வாழ்த்துகிறோம். * நூலேணி பதிப்பகம் * , சென்னை. * மின்மினி ஹைக்கூ * இதழ்
தமிழ்_ஹைக்கூ_உலகிற்கு_புதுசு 16 ஆண்டுகளுக்கு முன்னால் மின்மினி ஹைக்கூ இதழை நடத்தி வந்தேன். அதன் மூன்றாம் ஆண்டு கொண்டாட்டத்தில் அப்போது தமிழ்நாட்டில் மின்சார சிக்கல் இருந்தது. சென்னையில் நாள்தோறும் ஒரு மணி நேரம் மின்சாரம் தடைபடும். கை விசிறியில் ஹைக்கூ: அதை கருத்தில் கொண்டு அனைவருக்கும் உறுதியான நெகிழி கைவிசிறி யை பரிசளிப்பது என்று முடிவு செய்து அதில் 20 கவிஞர்களின் ஹைக்கூக்களை அச்சிட்டு ஆண்டு விழாவில் அளித்தோம். அஞ்சல் அட்டையில் ஹைக்கூ_தொகுப்பு: அதேபோல ஒரே அஞ்சல்_அட்டையில் பலரின் கவிதைகளைப் பதிப்பித்து ஹைக்கூ_தொகுப்பு ஒன்றை பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களோடு இணைந்து கொண்டு வந்தேன் இவை யாவும் தமிழ் ஹைக்கூ உலகிற்கு புதிய விடயங்கள். இப்போது ஹைக்கூவை ஆராதிக்கும் எழுத்தாளர்களுக்கு தெரிவிப்பதற்கான வாய்ப்பாக இந்த படங்கள் அமைந்துள்ளன.
கவிஞர்களே வணக்கம் வரும் *ஏப்ரல் 17 உலக ஹைக்கூ கவிதை நாள். இந்த நாளை ஹைக்கூ திருவிழாவாக நூலேணி பதிப்பகம் Nooleni publications கொண்டாட உள்ளது* உங்கள் படைப்புகளும் நூலாக்கி கொண்டாடலாம் வாருங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக