international Haiku day
அனைவருக்கும்
மழை துளிப்பா (ஹைக்கூ) வரலாற்று ஆவண இதழ்
நூலேணி பதிப்பகம் சார்பில் ஹைக்கூ நாள் நல்வாழ்த்துகள்.
ஹைக்கூ ஒரு பார்வை..,
மூன்று வரிகளில் முறையே,
ஐந்து, ஏழு, ஐந்து என (17 நேரசை, நிரையசைகளைக் கொண்டு) அமைகிற ஜப்பானின் புகழ் பெற்ற கவிதை வடிவம்தான் ஹைக்கூ.
ஜப்பானின் பாஷோ (ஹைக்கூ தந்தை) எழுதிய ஹைக்கூ கவிதையே, ஜென் தத்துவத்தின் முதல் ஹைக்கூ. எந்த அலங்காரமும் இன்றி இயற்கையை, உள்ளது உள்ளபடி கவிதையில் பாடுவது ஹைக்கூ.
"பழைய குளம்
தவளை குதித்தது
நீர் ஒலி"
- என்ற இந்த ஹைக்கூ கவிதை உலகப் புகழ் பெற்ற ஒன்று.
இதில் எல்லாமே சொல்லப்பட்டு விட்டது என்பார்கள். பழைய குளம் - உலகம், தவளை குதித்தது - வாழ்க்கை, நீர் ஒலி - வாழ்வின் சலனங்கள் அலை அலையாக அலைந்து அடங்குவது.
ஜப்பானிய இலக்கிய வரலாற்றின் எடோ காலத்தில்தான் (கி.பி 1603 முதல் 1867 வரை) சீன ஜப்பானிய மொழிக் கலவையாகத் தோன்றிய இது ஹொக்கூ என்று அழைக்கப்பட்டு பின்னர் ஹைக்கை என்று திரிந்து, இப்போதைக்கு ஹைக்கூ என்றாயிற்று.
இக் கவிதை வடிவம் தமிழில் குறும்பா, துளிப்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாமனப்பா, அணில் வரிப்பா என பல பெயர்கள் உண்டு.
தமிழில் ஹைக்கூ நூற்றாண்டைக் கடந்துவெற்றிநடை போடுகிறது
1984-2024 ஹைக்கூ நூல்கள் வெளியான 40ஆவது ஆண்டு
இந்தக் கொண்டாட்டத்தை நூலேணி பதிப்பகம் + மழை இதழ் ஜூன் மாத இறுதியில் உலகத் துளிப்பா மாநாடாக புதுச்சேரியில் கொண்டாட உள்ளது. அனைவரையும் வரவேற்கிறோம்.
குறுங்கவிதைகள் .
பதிலளிநீக்குR .S .பாலகுமார் .M .A .,
சந்தோசபுரம்.சென்னை ---600073
=================================
1.மூத்தமகள் திருமணம்
கையிருப்பு தினமும் கரைகின்றது
கடன் சுமை கூடுகிறது.
2.இன்பச்சுற்றுலா
காசுத்தந்து விலைக்கு வாங்குகிறார்கள்
காய்ச்சல் ,தலைவலி ,உடல்வலி .
3.சொந்த வீடு கட்டவே
வங்கிக்கடன் கேட்டபடி கிடைத்தது
தலைக்குமேல் நின்றது கடன்சுமை .
4.கடைகளுக்குச் சென்று பொருட்கள்
வாங்கிடும் பொழுதெல்லாம் இருப்பு
குறைந் துக்கொன்டே போகின்றது .
5.வெற்றிடமாக பெண்ணின் கழுத்து
தாலிச்சரடு அணிந்துக்கொண்டாள்
சுமங்கலி பட்டம் தேடி வந்தது .