children's literature
சிறுவர் இலக்கியத்தில் நாட்டம் ஏற்பட்ட பிறகு வாடகை வீட்டில் குடியிருந்தாலும் அதன் உரிமையாளரிடம் பேசி மாடியில் 2010 ஆம் ஆண்டு *அரும்பின் புன்னகை சிறுவர் அமைப்பை* ஆரம்பித்தோம்.
புதுச்சேரியில் மாணவர் பொது நலத் தொண்டு இயக்கம் அமைப்பில் உள்ள *புதுவைத் தமிழ்நெஞ்சன்* அவர்களின் மகள் *கு.அ.தமிழ்மொழி* மற்றும் மகன் *கு.அ.அறிவாளன்* ஆகியோரும் சென்னையில் எனது மகன் *இரா.விஸ்வராஜா* மகள் *இரா.யாழினி ராஜா* ஆகியோர் நிர்வாகிகளாக இருந்து அமைப்பு சிறப்பாக செயல்பட ஆரம்பித்தது.
புதுவை தமிழ் நெஞ்சன் அய்யாவும் நானும் (கன்னிக்கோவில் இராஜா) இணைந்து *அரும்பின் புன்னகை* சிறுவர் இதழை கொண்டு வந்தோம்.
மாதம் தோறும் ஒரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் தொய்வின்றி நடைபெற்றது.
அப்படியான ஒரு பொழுதில் ஓவியரும் கவிஞருமான *பவ. கணேஷ்* அழைக்கப்பட்டார்.
கொரனாவுக்கு பிறகே *லாலிபாப் சிறுவர் உலகம்* என் உரு மாறியது.
***
அரும்பின் புன்னகை சிறுவர் அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஓவியப் பயிற்சி முகாமிற்கு ஓவியரும் கவிஞருமான திரு. கணேஷ் கிருஷ்ணராஜன் தலைமைத் தாங்கி, சிறுவர்களின் எண்ணச் சிறகினை விரிக்க வைத்தார்.
மழலைகளின் மகிழ்ச்சிக் குவியலுக்கு இடையே அவர்தம் ஓவியங்களும் சிறகை விரித்துப் பறந்தன.
முன்னதாக மறைந்திருக்கும் ஓவிய விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவி பூஜாவிற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா. விஸ்வராஜா பரிசினை வழங்குகிறார்.
ஒளிப்படங்கள்: கன்னிக்கோவில் இராஜா. நிறுவனர், அரும்பின் புன்னகை சிறுவர் அமைப்பு
19.04.2015
கருத்துகள்
கருத்துரையிடுக