children's book
மானா பாஸ்கரன்
ஆடு ஆமையான கதை
கன்னிக்கோவில் இராஜா
தமிழ்ச் சிறார் படைப்பிலக்கியத்தில் மகத்தான இடம் கன்னிக் கோவில் இராஜாவுக்கு உண்டு. து 50க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியிருக்கிற இவர், பிஞ்சு மொழியில் எழுதும் படைப்பாக்கங்கள் அனைத்தும் சிறார்களின் மன உலகை வெளிப்படுத்துவதுடன், அதை வாசிக்கிற குழந்தை மனங்கள் மேன்மையுறுவதும் நிச்சயம்.
இந்நூலில் பொறியில் மாட்டாத எலி, காணாமல் போன ஆமை, பேய்ப்பூச்சி, பயமுறுத்திய மரம், பலூன் ஊதிய பூனை, மீன்களின் ஓட்டப்பந்தயம், பயந்து ஓடிய சிங்கக்குட்டி மற்றும் இறக்கை இல்லாத பறவை போன்ற கதைகள் எளிய மொழியில் குழந்தைகளை வசீகரம் செய்யும் திறத்தில் அமைந்துள்ளன.
கன்னிக்கோவில் இராஜா லாலிபாப் சிறுவர் உலகம் என்ற வாட்ஸ்அப் குழுவை அமைத்து, பல சிறார்களுக்குக் கதை சொல்லும் பழக்கத்தை உருவாக்கி வருகிறார். இவரது தூண்டுதலில் பல குழந்தைகள் சிறார் படைப்பாளிகளாக, நூலாசிரியராக பரிணாமம் பெற்றுள்ளனர்.
வெளியீடு: நிவேதிதா பதிப்பகம்,
4 ஸ்டெப் ஸ்டோன்ஸ், ஜி-1, முல்லை அடுக்ககம், வேலாயுதம் காலனி, சாலிகிராமம், சென்னை-93.
8939387296.
பக்கம்: 64 விலை: ரூ.80.
குமுதம்
கருத்துகள்
கருத்துரையிடுக