இடுகைகள்

மே, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Children's story rhymes kannikovil Raja

படம்
  *கன்னிக்கோவில் இராஜா சிறார் கதைப்பாடல் multicolour board book வடிவில் சிறார் இலக்கியத்தில் தமிழ் எழுத்தாளர்கள் படைப்புகளை பல வண்ணத்தில் கெட்டியான அட்டைத் தாளில் (multicolour boars book) நூலாகக் கொண்டு வருகிறது *Wakeup Books sivakasi* *நான் ( Kannikovil Raja ) எழுதிய "பாப்பாவின் கனவு"* (சிறார் கதைப் பாடல்) படைப்பை... ஆங்கிலத்தில் வரும் நூல்களைப் போல கெட்டியான அட்டைத் தாளில் பல வண்ணத்தில் நூலாக கொண்டு வந்துள்ளனர். நீங்கள் வாங்கி குழந்தைகளுக்கு பரிசளிக்கலாம். QR code வடிவில் இசையோடு கூடிய பாடலும் இணைக்கப்பட்டுள்ளது. கதைப் பாடலை எழுத்துக் கூட்டி வாசிக்கலாம். QR code மூலம் பாடலாகக் கேட்கலாம். புத்தகத்தின் விலை ரூ.150/- மட்டுமே Wakeup publications Sivakasi 📞 98846 18856 / 7871161164

கன்னிமாரா நூலேணி ஹைக்கூ விழா

படம்
  கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் நூலேணி பதிப்பகம் Nooleni publications   நடத்திய ஹைக்கூ இலக்கிய விழா ஆண்டுதோறும் ஹைக்கூ இலக்கியத்தில் பல நூறு நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன  கடந்த பல ஆண்டுகளாக கன்னிமாரா நூலக வாசக வட்டமும் நூலேணி பதிப்பகம்  இணைந்து சிறந்த ஹைக்கூ நூல் போட்டி நடத்தி வருகிறது 2024ஆம் ஆண்டுக்கான ஹைக்கூ போட்டியில் வென்ற கவிஞர்களுக்கு பரிசளிப்பு விழா 3.5.2025 சனிக்கிழமை மாலை டிஸ்கவரி புக் பேலஸில் உள்ள பிரபஞ்சன் அரங்கத்தில் நடைபெற்றது விழாவிற்கு இயக்குனர் பிருந்தா சாரதி தலைமையற்றார். திரு வேடியப்பன் மற்றும் கவிஞர் மு.முருகேஷ் ஆகியோர் வாழ்த்தினர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வரவேற்றார் பேராசிரியர் இராம.குருநாதன் அவர்கள். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நன்றி கூறினார் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா. நிகழ்ச்சியில் பரிசு பெற்ற கவிஞர்களுக்கு புத்தக மாலை, சான்றிதழ், பணமுடிப்பு மற்றும் "கன்னிமாரா நூலேணி ஹைக்கூ விருது 2024" வழங்கப்பட்டன. சான்றோர்கள் நிரம்பிய அவையில் ஹைக்கூவிழா இனிதே நிறைவுற்றது

A new attempt in the history of Tamil haiku

படம்
  தமிழ் ஹைக்கூ வரலாற்றில் புதிய முயற்சி புதுச்சேரி, தமிழ்நாடு, அமெரிக்கக் கவிஞர்களின் தொடர் ஹைக்கூ நூல்கள் வெளியீடு தமிழ் ஹைக்கூ வரலாற்றில் பல புதிய முயற்சிகள் நடந்த வண்ணமே இருக்கிறது. ஹைக்கூ பொட்டலம், காதல் என்ற சொல் வராத ஹைக்கூ நூல், பனி, மது போன்ற பாடுபொருள்களைக் கொண்ட ஹைக்கூ நூல்கள், கட்ரைவிரல் அளவு ஹைக்கூ நூல், விசிட்டிங் கார்டில் ஹைக்கூ, அஞ்சல் அட்டை, உள்ளூர் அஞ்சல் (இன்லேண்ட் லெட்டர்) அரிசியில் ஹைக்கூ, சாவிக்கொத்தில் ஹைக்கூ, விசிறியில் ஹைக்கூ, தேநீர்க் குவளையில் ஹைக்கூ, கையடக்க ஹைக்கூ நூல், சட்டை பேட்ஜ் ஹைக்கூ, ஹைக்கூ நூலோடு கைக்குட்டை என இன்னும் இன்னும் பலவற்றில் புதிய முயற்சியாக ஹைக்கூ கவிஞர்கள் செய்தவண்ணமே இருக்கிறார்கள். தமிழ் ஹைக்கூ தடத்தில் பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் மற்றும் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா இணைந்து ஹைக்கூ (துளிப்பா) நிகழ்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் ஹைக்கூ நூற்றாண்டை (1916-2016) வரவேற்று புதுச்சேரியில் அதன் நிறைவை சென்னையிலும் நடத்தியது.  துளிப்பாத் திருவிழாவை பல்வேறு ஆண்டுகளாக நடத்தி வருவது. துளிப்பா நாளிதழ், கிழமை இதழ், வார இதழ் நடத்தியது: த...